முத்திரை : (பலவற்றில் இருந்து திரட்டப்பட்ட சிறு சிறு குறிப்பு ) :
- முத்திரை என்பது எளிய அழகிய தமிழ்ச் சொல் ஆகும்.
- முத்துதல் என்ற தமிழ்ச்சொல்லானது பதித்தல் என்ற வினையைக் குறிப்பதாகும். உதடுகளைக் கன்னத்தில் பதிப்பதனையே முத்தம் என்று அழைக்கிறோம்.
- முத்துதல் என்பது முத்தமிடுதல் என்ற பொருளில் கீழ்க்காணும் சங்கப் பாடல்களில் பயின்று வந்துள்ளதைக் காணலாம்.
புதல்வர் பூ கண் முத்தி மனையோட்கு - புறம் 41/14
- கை என்பதன் சமஸ்கிருத சொல்லே ஹஸ்தம் எனப்படுகிறது.
இதை தமிழில் முத்திரை என்பர்.
பஞ்சபூதத்தின் தொகுப்பு :
- நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாசம், இதுவே பஞ்சபூதமாகும்.
- நமது ஐந்து விரல்களும் ஐந்து மூலங்களை குறிக்கின்றன.
- கட்டை விரலானது நெருப்பையும்
- சுட்டு விரலானது காற்றையும்
- நடுவிரவிரலானது ஆகாயத்தையும்
- மோதிர விரலானது நிலத்தையும்
- சுண்டு விரலானது நீரையும் குறிக்கிறது என்றும் குறிப்பிடுகிறார்.
இவற்றை தெளிவாக உணர்ந்தே முத்திரைகளைப் பயன்படுத்த தொடங்க வேண்டும்
பஞ்சபூத கலவை :
- முத்திரை என்பது கைவிரல் நுனிகளை இணைத்து செய்வதாகும்.
- உடல் அமைப்பில் சரியான செயல்களை செய்தால், நீங்கள் வாழ்க்கையில் அற்புதமான காரியங்களைச் செய்ய முடியும்.
- உள்ளங்கையின் நிலையை மாற்றினால் உடல் வேலை செய்யும் முறையை மாற்றலாம்.
- உடல் சார்ந்த வேலை செய்வது தவிர பல செயல்களை செய்யக் கூடிய திறன் கைகளுக்கு இருக்கிறது.
- ஒரு குறிப்பிட்ட முத்திரையை கையில் வைத்துகொள்வதால், சக்தி ஒரு குறிப்பிட்ட வழியில் நகரும்.
- இங்கே நீங்கள் உங்கள் கைகளை அசைத்தால், வேறு எங்கோ எதோ ஒன்று நடக்குமாறு செய்ய முடியும்.
- உங்கள் மூச்சை ஒரு குறிப்பிட்ட வழியில் சீராக்க நூற்றுக்கணக்கான முத்திரைகள் உள்ளன.
- வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்களுக்கு வெவ்வேறு விதமான முத்திரைகள் உள்ளன.
- தேவையான புரிதலும், விழிப்புணர்வும் இல்லாமல் இது ஒரு பயிற்சியாக செய்யப்படுகிறது.
- உடல் எடை குறைப்பிற்கும், ஆரோக்கியத்திற்கும் உடற்பயிற்சியை விட யோகாவே சிறந்ததாக விளங்குகிறது.
- முத்திரைகளுக்கும் கூட வியக்கும் படியான உடல்நல நன்மைகளை வழங்குகிறது
- ஒவ்வொரு முத்திரையும் தனித்துவம் பெற்றது. அவைகளை சரியான வழியில் செய்திட வேண்டும்
- நம் முன்னோர்கள் நமக்களித்த மிகச்சிறந்த பொக்கிஷங்களில் அனைவராலும் மிகவும் எளிதாகபயன்படுத்தக்கூடியது முத்திரைகள் ஆகும்.
- ஒவ்வொரு விஷயத்தையும் உணர்ந்தே நம் முன்னோர்கள் முத்திரைகள் என்னும்தொழில் நுட்பத்தை உருவாக்கினர்.
- பஞ்ச பூதங்களின்கலவையாக இருக்கிறது என்பது இன்றைய விஞ்ஞானமும்ஏற்றுக் கொண்டுள்ள உண்மை
- நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளின் பண்புகள் நம்கைவிரல்களில் அமையப் பெற்றிருக்கின்றன
- மோகினி முத்திரை, சோபினி முத்திரை, திருவினி முத்திரை, யோனி முத்திரை, அபான முத்திரை, சுவகரண முத்திரை முதலிய ஆறு முத்திரைகளையும் "சித்தியுள்ள முத்திரைகள் ஆறு" என்கிறார் தன்வந்திரி.
முத்திரையைப் பயன்படுத்தும் முன் நல்ல குருவிடம்முறையே பயின்று
பின்பு பயிற்சி செய்வதே நல்ல பலன்களைதரும்.
சில முத்திரைகளைப் பார்ப்போம்
சின் முத்திரை :
கோபம், மன அழுத்தம், கவலைகள் நீங்கும். ஞாபகசக்தி மேலோங்கும். மனச்சோர்வு நீங்கும். படித்தவை நினைவில் நிற்கும்.
குபேர முத்திரை :
செல்வ வளத்தை அளிப்பதோடு மன வளத்தையும் மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது இந்த முத்திரை. மனத்தில் உள்ள குழப்பங்கள் நீங்கித் தெளிவு கிடைக்கும். எதிர்மறை எண்ணங்கள் விலகி முகம் பொலிவடையும்.
பிராண முத்திரை :
யோகாசன முத்திரை உங்கள் செரிமான அமைப்பை மேம்படுத்தி, உங்கள் கண்பார்வையின் கூர்மையை அதிகரித்து, சோர்வை எதிர்த்து ஆற்றல் திறனுடன் வைத்திருக்க உதவும்.
அக்னி முத்திரை :
உடல் எடையை குறைப்பதற்கு இந்த முத்திரை; இது கொழுப்புகளை குறைத்து செரிமான செயல்பாட்டை துரிதப்படுத்தும்.
வாயு முத்திரை :
உடலில் உள்ள அளவுக்கு அதிகமான காற்றை வெளியேற்றி, வாயுவினால் ஏற்படும் நெஞ்சு வழியை குறைக்க இது உதவும்.
ஆதி முத்திரை :
உயிர்சக்தி பாதுகாக்கப்படும். உடல் புத்துணர்ச்சியுடன் இயங்கும். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். மன ஒருமைப்பாடு கிடைக்கும்.
சங்கு முத்திரை :
தொண்டை சம்பந்தமான நோய்களை குணப்படுத்துகிறது. ரத்தத்தை சுத்தப்படுத்தவும், செரிமானக் கோளாறுகளைப் போக்கவும் வல்லது. மூளை சோர்வடையாமல் நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
"ஆபத்து என்று தெரிந்து அனைத்தையும் இழக்க தயாரான நிலையில் கனவை அடைய போராடுவதே வாழ்க்கையாக இருக்கும்.
அதை அனுபவித்து கடந்து வந்த நபருக்கு மட்டுமே தெரியும்"
☺☺☺☺☺
Super
பதிலளிநீக்கு☻☺☺☺
பதிலளிநீக்கு