திருவண்ணாமலை கார்த்திகை தீபம் சிறப்பு நேரலை
திருவண்ணாமலை:
- திருவண்ணாமலை திருத்தலம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களுள் அக்னி தலமாக இது விளங்குகிறது.
- இங்கு அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- இந்நிலையில், இன்று அதிகாலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
- இன்று மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலையின் மீது மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.
- இதற்காக தீப கொப்பரைக்கு திறப்பு பூஜை நடத்தப்பட்டு 3,500 லிட்டர் நெய், ஆயிரம் மீட்டர் காடா துணிகள் மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
- நீதிமன்ற உத்தரவின்படி உள்ளூர் பக்தர்கள் 5 ஆயிரம் பேரும், வெளியூர் பக்தர்கள் 15 ஆயிரம் பேரும் கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் இன்று பகல் 12 மணிக்கு தொடங்கி, நாளை (19ம் தேதி) 2.26 மணிக்கு நிறைவடைகிறது.
பரணி பலன்கள் :
- வீட்டு பூஜையறையில் ஒரு முக தீபம் ஏற்றினால் மத்திம பலன் தரும்.
- முக தீபம் ஏற்றினால் குடும்பம் ஒற்றுமை தரும்.
- முக தீபம் ஏற்றினால் புத்திர சுகம் தரும்.
- முக தீபம் ஏற்றினால் பசு, பூமி சுகம் தரும்.
- முக தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்.
மற்ற கோவில்களில்
- திருப்பரங்குன்றம், சுவாமிமலையில் கார்த்திகை தீபத்தின் போது முருகப்பெருமான் பட்டாபிஷேகம் நடைபெறும்.
- அனைத்து கோவில்களிலும் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும். மாலையில் சொக்கப்பனை ஏற்றி, கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.
- தமிழகத்தில் கோயில்கள், வீடுகள், கடைகள், குளங்கள், மலைகள் அனைத்தும் பாரம்பரிய விளக்குகளால் அலங்கரிக்கப்படும்.
- பொதுவாக அனைத்து கிருத்திகை நட்சத்திரங்களிலும் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். கார்த்திகை மாதத்தில் (நவம்பர்-டிசம்பர்) கிருத்திகை நட்சத்திரம் பௌர்ணமியில் (பௌர்ணமி நாள்) வருகிறது.
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் சிறப்பு நேரலை
ராசிகாரர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்
கடகம், ரிஷபம், விருச்சிகம், கன்னி, கும்பம், மீனம் ஆகிய இந்த 6 ராசிக்காரர்கள் குருபரிகார ஆலயங்களுக்கு சென்று பரிகாரம் செய்தால் பாதிப்பு குறையும். தடைகள் நீங்கி புத்திரப்பேறு கிட்டுவது நிச்சயம். குருதிசை, குருபுத்தி நடப்பில் உள்ளவர்கள் மற்றும் குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டு, முன்னேற இயலாத நிலையில் இருப்பவர்கள் குரு பரிகாரத்தலங்களில் தரிசனம் செய்யலாம். மேலும் வியாழக்கிழமை விரதம் கடைபிடித்தால், குரு பகவானின் சக்தியால் வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறலாம்.
- பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் சென்னை அருகில் பாடியில் வலிதாயநாதர் கோயில் குருபகவான் வழிபட்ட தலமாகும். இங்கு குருபகவான் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் - பேரம்பாக்கம் வழியில் தக்கோலம் உள்ளது. வலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை மடித்து அமர்ந்திருக்கிறார். தலையைச் சற்றே வலதுபுறம் சாய்த்த நிலையில் உத்கடி ஆசனத்தில் அமர்ந்த திருவுருவை இங்கு தரிசிக்கலாம். இது குருபகவானுக்கு சிறந்த பரிகார தலமாகும்.
- ராஜகுருவின் தரிசனம் தஞ்சை அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம். தஞ்சாவூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் மங்காம்பிகை சமேத வசிஷ்டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவனும் இறைவியும் அருள்புரிந்து வருகின்றனர். இறைவனுக்கும், இறைவிக்கும் நடுவில் நின்ற நிலையில் குருபகவான் ராஜ குருவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். குரு பகவானை வழிபட்டால் தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.
- தட்சிணாமூர்த்தி திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் குரு பரிகார ஸ்தலமாகும். இத்தலம் பஞ்ச ஆரண்யத் தலங்களில் ஒன்றாகும். ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் பிரகாரத்தின் இடது புறம் தட்சிணாமூர்த்தியாக இங்கு குரு பகவான் அருள் புரிகிறார். தமது சீடர்களுக்கு 24 அட்சரங்கள் உள்ள மந்திரத்தை உபதேசித்தார் என்பதால், இவரை 24 முறை வலம் வந்து, 24 தீபங்கள் ஏற்றி வழிபடுகிறார்கள். வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை சமர்பித்து முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து இந்தக் குரு பகவானை வழிபடுவது சிறப்பு.
- காசிக்கு நிகரான தலம் மயிலாடுதுறையில் கோயில் கொண்டுள்ள மயூரநாதரை குரு பகவான் வழிபட்டதாக ஐதீகம். இங்கு தட்சிணாமூர்த்தியாக அருள் பொழியும் குரு பகவானை வழிபட குரு தோஷங்கள் நிவர்த்தியாகும். காசிக்கு நிகரான ஆறு தலங்களில் மயிலாடுதுறையும் ஒன்று.
- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் உள்ள பட்டமங்கலம் ஆலயங்களில் குருவிற்கு பரிகார பூஜைகள் செய்து வழிபடலாம். பட்டமங்கலத்தில் கிழக்கு நோக்கிய அனுக்கிரஹ தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். குரு பெயர்ச்சி நிகழப்போகும் இந்த நேரத்தில் நேரில் சென்று குரு பகவானை தரிசனம் செய்யலாம்.
- திருக்குருகூர் - ஆழ்வார் திருநகரி நவதிருப்பதிகளுள் ஒன்றான ஆழ்வார்திருநகரி குரு ஸ்தலமாகும். இந்த ஸ்தலம் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ளது. இந்த ஸ்தலத்தில் பாயும் தாமிரபரணி பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. நம்மாழ்வார் அவதரித்த பெருமை இந்த ஸ்தலத்திற்கு உண்டு. நம்மாழ்வாருக்கு ஆதிநாதப் பெருமாள் குருவாக அருள்பாலிக்கிறார்.
- திருச்செந்தூர் குரு, தட்சிணாமூர்த்தி குரு பகவானுக்குரிய தலங்களில் பிரதான இடம் பெறுவது முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில், இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் ஆகும். இங்குள்ள மேதா தெட்சிணாமூர்த்தியும் விசேஷமானவர். வலது கையில் சிவபெருமானுக்குரிய ஆயுதமான மழுவும், இடக்கையில் மானும் உள்ளது.
- தாமிரபரணிக் கரையில் உள்ள நவ கைலாயங்களுள் ஒன்றான முறப்பநாடு தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகில் உள்ளது. இங்கே கைலாச நாதர் குருவின் அம்சமாக அமர்ந்துள்ளார். தாமிரபரணியில் நீராடி குருபகவானை வணங்க தோஷங்கள் நீங்கும். பாதிப்புகள் குறைந்து நன்மைகள் அதிகமாகும். வியாழக்கிழமைகளில் சென்று பூஜை செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post