வியாழன், 16 டிசம்பர், 2021

டைட்டன் கல்வி உதவிதொகை திட்டம் 2021-22 | வசதியற்ற ஏழை மாணவர்களுக்கு கல்வி | TITAN SCHOLARSHIP SCHEME


ஓசூரில் இயங்கிவரும் டைட்டன் நிறுவனமானது கடந்த 33 வருடங்களாக உயர் கல்வி பயலுவதற்கான கல்வி உதவிதொகை வழங்கும் திட்டத்தை மிகவும் சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 2537 ஏழை மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.


டைட்டன் கல்வி நோக்கம் 

இந்த திட்டத்தின் நோக்கமானது  தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள  அரசு பள்ளியில் பயிலும்  வசதியற்ற ஏழை மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களின் உயர் கல்வி (ITI, Diploma, UG, PG, Engineering, Medical & Agriculture) கனவை நிறைவேற்றுவதுவே ஆகும். 

இந்த திட்டத்தில் பெண்கள், தாழ்த்தபட்ட, பழங்குடியின மற்றும் ஊனமுற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கபடும். இதில் பதிவிட்டுள்ள  இணைய வலையில் மாணவர்களின் விவரங்களை பதிவிட்ட பின்னர் திட்ட தகுதியின் அடிப்படையில்  நேரடி கலந்தாய்விற்கு அழைக்கப்படுவர். நேரடி கலந்தாய்வில் தகுதியான மற்றும் திறமையான மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் உயர் கல்வி முடியும் வரை அவர்களுக்கான கல்வி உதவிதொகை வழங்கப்படும். 

இந்த வருடத்தின் கல்வி திட்ட அறிவிப்பானது  வரும் ஜனவரி மாதம் 15,16,18,19,21 மற்றும் 22 டிசம்பர்  2021 ஆகிய தினங்களில் தினத்தந்தி மற்றும் தினகரன் நாளிதழில் வெளியாகும். 

இந்த திட்டத்தின் பலன் சரியான அதாவது படிப்பில் மிகுந்த ஆர்வமுள்ள படிக்க வசதியற்ற மாணவர்களுக்கு செயல்படுத்தி வருகிறது.

மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யயும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for Read the post

Featured Post

"I Am a Little Teapot" 3D Animated Nursery Rhyme – History, Importance & Benefits

I Am a Little Teapot Introduction "I Am a Little Teapot" is a popular nursery rhyme among young children. Recently, the Simple Kal...