மதுரையில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் நடைபெறும் உணவுத் திருவிழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டுமென நடிகர் சூரி வீடியோ வெளியிட்டுள்ளார்.
உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உணவுத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் ஜூலை 23ஆம் தேதி மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவுத் திருவிழா மதுரையில் நடைபெற உள்ளது.
மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள சிறு குறு தொழில் சங்கத்தில் இந்த உணவுத் திருவிழா நடைபெற உள்ளது. இந்த உணவுத் திருவிழாவில் மதுரையின் பாரம்பரிய உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. உணவுத் திருவிழாவில் உடலுக்கு சக்தியான உணவுகள் தொடங்கி அனைத்து வகையான உணவுகளும் இடம்பெறும் என கூறப்பட்டு உள்ளது.
இந்த நிகழ்வையொட்டி நகைச்சுவை நடிகர் சூரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெறும் மாபெரும் உணவுத் திருவிழாவில், மதுரை மக்கள் குடும்பத்துடன் பங்கேற்று, மதுரையின் சிறந்த உணவுகளை சாப்பிட்டு சந்தோஷமாக செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/143714/Actor-Soori-invite-people-for-Madurai-Food-festival.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post