சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடிகர் அஜித்குமாரை காண வந்து ஏமாற்றமடைந்த ரசிகர்கள். ஆனால் நடிகை யாஷிகா ஆனந்தை பார்த்த மகிழ்ச்சியில் கலைந்து சென்றனர்.
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவில் ஏழு நிலை புதிய ராஜகோபுரம் கும்பாபிஷேக விழா கடந்த ஜூலை 6ஆம் தேதி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி நேற்று மாலை சமயபுரம் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு நடிகர் அஜித்குமார் சாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் பரவியது.
இதனை அடுத்து ஏராளமான ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் கோவில் பின் வாசலில் அஜித்குமாரை காண ஆவலுடன் திரண்டனர். இதையடுத்து தகவலறிந்த சமயபுரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இரவு 9 மணி வரை நடிகர் அஜித்குமார் கோவிலுக்கு வரவில்லை. இதனால் ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். அப்போது பிக்பாஸ் புகழ் திரைப்பட நடிகை யாஷிகா ஆனந்த் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தார்.
அஜீத்குமார் வருவார் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் யாஷிகா ஆனந்தை பார்த்தவுடன் அவருடன் செல்பி எடுப்பதற்கு முண்டியடித்தனர். சுமார் ஒருமணி நேரமாக அவரை எங்கும் நகர விடாமல் சூழ்ந்த ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/143956/Ajith-fans-who-were-disappointed-Yashika-Anand-made-them-happy.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post