யூடியூபர் சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சவுக்கு சங்கர் பதிவிட்டிருந்தார். இப்பதிவு அவதூறு பரப்புவதாக இருக்கிறது எனக் கூறி சவுக்கு சங்கர் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நீதிபதி சுவாமிநாதன் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடுமையான விமர்சனங்களை ஏற்கலாம் என்றும் ஆனால் அவதூறுகளை ஏற்க முடியாது என்றும் தமது பல உத்தரவுகளை ஏற்க முடியாத வார்த்தைகளால் சவுக்கு சங்கர் விமர்சித்துள்ளார் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
வழக்கு தொடர்பாக ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கில் தகவல்
தொழில்நுட்பத்துறை செயலரை எதிர்மனுதாரராக சேர்த்ததுடன் வழக்கில் உதவ மத்திய உதவி சொலிசிட்டர் ஜெனரலுக்கும் நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/143721/madurai-hc-judge-asked-to-take-defamation-action-against-savukku-shankar.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post