திங்கள், 25 ஜூலை, 2022

`ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே..’ என்றுரைத்த பாரதியார் ஊரில், மற்றுமொரு ஆணவப்படுகொலை?

தூத்துக்குடியில் எட்டையாபுரம் அருகே காதல் திருமணம் செய்த தம்பதியரை பெண்ணின் தந்தை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குட்டி (வயது 50). இவரது மகள் ரேஸ்மா (வயது 20), கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான வடிவேல் என்பவரது மகன் மாணிக்கராஜ் (வயது 26) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் காதல் ஜோடி இருவரும் ஊரை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

image

இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்னர் இருவரும் ஊருக்கு திரும்ப சென்றுள்ளனர். இவர்களது திருமணத்திற்கு ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். அதைத்தொடர்ந்து, ஊர் பஞ்சாயத்து மூலம் பேசி அவர்கள் இருவரையும் தனிக்குடித்தனம் வைத்துள்ளனர். ஆனாலும் முத்துக்குட்டி தன்னுடைய மகள் மீது ஆத்திரத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை 4 மணிளவில் ரேஷ்மா மற்றும் அவரது கணவர் வீட்டில் இருந்தபோது, அங்கு சென்ற முத்துக்குட்டி இருவரையும் சராமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

image

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த எட்டையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இருவரது உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக எட்டையாபுரம்  போலீசார் வழக்குப் பதிந்து தப்பியோடிய முத்துக்குட்டியைத் தேடி வருகின்றனர். சம்பவ இடத்தை விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் பார்வையிட்டார். இந்த சம்பவம் எட்டையாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/144054/Another-Murder-of-Arrogance-happened-in-the-village-of-Ettayapuram.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for Read the post

Featured Post

"I Am a Little Teapot" 3D Animated Nursery Rhyme – History, Importance & Benefits

I Am a Little Teapot Introduction "I Am a Little Teapot" is a popular nursery rhyme among young children. Recently, the Simple Kal...