கள்ளக்குறிச்சியில் இருக்கும் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி உயிரிழந்ததையடுத்து அவரது சடலம் இன்று பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் சந்தேகமான முறையில் உயிரிழந்தார். அவரது உடல் கடந்த 13ஆம் தேதியிலிருந்து அவரது பெற்றோர்களால் வாங்கப்படாமல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உள்ளது. அவரது உடலுக்கு இரண்டு முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற அறிவுறுத்தல் அடிப்படையில் இன்று பெரிய நெசலூர் கிராமத்தில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இன்று காலை அரசு மருத்துவமனைக்கு மாணவியின் பெற்றோர்கள் வந்தனர். இதனையடுத்து மாணவியின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அசம்பாவிதங்களை தடுக்க மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஏற்கெனவே மாணவியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/143899/Kallakurichi-student-body-given-to-parents-today-morning.html
0 Comments:
கருத்துரையிடுக
Thanks for Read the post