கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் சந்தேகமான முறையில் உயிரிழந்தார். அவரது உடல் கடந்த 13ஆம் தேதியிலிருந்து அவரது பெற்றோர்களால் வாங்கப்படாமல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உள்ளது. அவரது உடலுக்கு இரண்டு முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற அறிவுறுத்தல் அடிப்படையில் நாளை பெரிய நெசலூர் கிராமத்தில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. இந்நிலையில் தற்போது கிராமத்தில் போலீசார் ஒலிபெருக்கி மூலமாக “மாணவியின் இறுதி ஊர்வலத்தில் உறவினர்களும் உள்ளூர் மக்களும் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்றும், வெளி ஆட்களோ பிற அமைப்புகளோ இதில் பங்கேற்கக் கூடாது எனவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என ஒலிபெருக்கி மூலமாக அறிவுறுத்தி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/143891/No-outsiders-allowed-in-Kallakurichi-student-s-funeral---Police.html
0 Comments:
கருத்துரையிடுக
Thanks for Read the post