கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு கடந்த 10 ஆம் தேதி பூச்சொறிதல் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து கிராமங்களில் உள்ள காவல் தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து படையலிட்ட நிலையில், கடந்த 17 ஆம் தேதி இரவு காப்புக்கட்டுதலுடன் ஆடிப் பெருந் திருவிழா தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து தினசரி பால் குடம் எடுத்தல் மற்றும் அன்னதான நிழ்ச்சிகளும் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று முன்தினம் நடந்தது. இந்நிலையில், நேற்று மாலை காய், கனி, தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், அம்மன் வீற்றிருக்க வானவேடிக்கை, மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர் வடம்பிடித்து இழுக்க தேரோட்ட திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது.
இந்த தேரோட்ட விழாவில் கீரமங்கலம் மற்றும் அதனை சுற்றிய கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/144061/Pudukottai-Keeramangalam-Muthumariamman-temple-procession-held-with-criticism.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post