பொன்னமராவதி அருகே வீட்டிற்குள் புகுந்த விஷப்பாம்பை ஒருமணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் லாவகமாக பிடித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பாண்டி அம்மன் கோயில் வீதியில் வசிப்பவர் ராஜேஸ்வரி. இவரது வீட்டிற்குள் விஷப் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதை பார்த்த ராஜேஸ்வரி, அதிர்ச்சி அடைந்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொன்னமராவதி தீயணைப்புத் துறை வீரர்கள் சுமார் ஒருமணி நேரம் போராடி பாம்பு பிடிக்கும் கருவியைக் கொண்டு லாவகமாக விஷப் பாம்பை பிடித்தனர்.
பின்னர் அந்த பாம்பை வனத்துறையினர் மூலம் பொன்னமராவதி அருகே உள்ள காப்புக் காட்டில் விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/143962/Venomous-snake-entered-the-house-The-fire-department-fought-for-an-hour-to-catch-it.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post