வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான 4வது இருபது ஓவர் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரையும் கைப்பற்றியுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை எடுத்தது. ரிஷ்ப் பந்த், ரோஹித் சர்மா, அக்சர் படேல், மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் அணியின் ஸ்கோர் உயர உதவிகரமாக இருந்தனர். 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 132 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆவேஷ் கான், அக்ஸர் படேல், மற்றும் ரவி பிஷ்னோய் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் நிகலோஸ் பூரானும், ரோவ்மேன் பவலெயும் தலா 24 ரன்களை எடுத்தனர். அந்த அணியின் ஐந்து பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களுடன் பெவிலியன் திரும்பினர். 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்தார் அர்ஷ்தீப்.
இதனை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான 20 ஓவர் தொடரை கைப்பற்றியது இந்தியா. 4வது 20 ஓவர் போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/144845/India-beat-West-Indies-India-won-by-59-runs.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post