Translate

இந்த வலைப்பதிவில் தேடு

'ஸ்டாலின்தான் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர்' - சிறுமி தான்யாவின் பெற்றோர் உருக்கம்!

குழந்தை தான்யாவை காப்பாற்றிய தமிழக முதலமைச்சர் தான் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சராக இருக்க வேண்டும்; அவர்தான் எங்கள் குலசாமி என சிறுமி தான்யாவின் பெற்றோர் உருக்கமாக பேசியுள்ளனர்.

திருப்பெரும்புதூர் அருகே உள்ள சவீதா மருத்துவமனையில் முகச்சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்த சிறுமி தான்யாவுக்கு தமிழக முதல்வரின் உத்தரவின் படி முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த நிலையில் மருத்துவர்களின் அறிவுரைப்படி சிறுமி தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார், சிறுமியை பார்க்க யாருக்கும் அனுமதியில்லை.

image

அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் அறிக்கை அளித்துள்ள நிலையில் சிறுமி தான்யாவின் தொகுதியான மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் சிறுமி தான்யா சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனைக்கு நேரில் வந்து சிறுமியின் பெற்றோர்களிடம் நலம் விசாரித்து ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி அளித்தார். மருத்துவர்களிடம் சிறுமி குறித்து கேட்டறிந்தார். தன்னுடைய தொகுதியின் சார்பில் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாகவும் பெற்றோரிடம் அவர் தெரிவித்தார்.

நிதி உதவி அளித்த சட்டமன்ற உறுப்பினருக்கும் தன்னுடைய குழந்தையை காப்பாற்றிய தமிழக முதலமைச்சருக்கும் கண்ணீர் மல்க பெற்றோர் நன்றி தெரிவித்தனர். முதலமைச்சரை சந்திக்க சிறுமியும் தாங்களும் ஆர்வமுடன் உள்ளதாகவும் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சராக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தான் இருக்க வேண்டும் என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/145971/Tanya-s-parents-says--Stalin-should-be-the-permanent-Chief-Minister-of-Tamil-Nadu.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post