மணிமங்கலம் காவல் நிலையம் அருகே முன் விரோதம் காரணமாக இருவரை வெட்டி படுகொலை செய்து நான்கு பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மணிமங்கலம் காவல் நிலையம் அருகிலேயே இருவர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மணிமங்கலம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (23) மற்றும் சுரேந்தர்(20), ஆகிய இருவர் காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது நான்கு பேர் கொண்ட கும்பலொன்று அவர்களை முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்துள்ளனர். அப்படியே வந்து அவர்கள் காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கின்றனர்.
அவர்களிடம் மணிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மூன்று மாதத்திற்கு முன்பு நடந்த கொலைக்கு பழி தீர்க்கும் விதமாக இந்த கொலை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சரணடைந்தவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/145895/Two-murdered-at-the-door-of-the-police-station.html
0 Comments:
கருத்துரையிடுக
Thanks for Read the post