கோவை அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை ஆலந்துறை அடுத்த மத்தவராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு அந்த பள்ளியில் பணியாற்றும் இயற்பியல் ஆசிரியர் பால் கோவிந்தராஜ் என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக மாணவிகள் பெற்றோர்களிடம் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மாணவிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதில், ஆசிரியர் பால் கோவிந்தராஜ் பல மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் ஆசிரியர் பால் கோவிந்தராஜ் மீது காருண்யா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு மற்றும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆகியோரின் விசாரணை அறிக்கையின் படி முதற்கட்டமாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி, ஆசிரியர் பால் கோவிந்தராஜை தற்காலிக பணியிடம் நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/146175/Coimbatore-Sexual-harassment-of-schoolgirls-Government-school-teacher-suspended.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post