வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

டைரி எழுதாமல் வந்த மாணவனை தாக்கிய ஆசிரியர் - போலீஸில் புகார்

திருவள்ளூர் அருகே தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனை ஆசிரியர் தாக்கியதில் பள்ளி மாணவனுக்கு தலையில் வீக்கம் ஏற்பட்டுள்ளதால் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவள்ளூர் மாவட்டம், திருவலாங்காடு ஒன்றியற்குட்பட்ட வீர கோவிலில் சென் ஜோசப் தனியார் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது இந்த பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், வேணுகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் - சாந்தி தம்பதியரின் மகன் கிஷோர் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

image

இந்நிலையில் நேற்று, டைரி எழுதாமல் வந்ததைக் கண்டித்த ஆசிரியர், கிஷோரை குச்சியால் தலையில் அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த கிஷோர் வீட்டிற்கு வந்து ஆசிரியர் அடித்ததை தனது தாய் சாந்தியிடம் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து சாந்தி மற்றும் அவரது உறவினர்கள் ஆசிரியரிடம் கேட்டுள்ளனர்.

image

அப்போது என்னை ஒன்னும் பண்ண முடியாது நீ எங்க வேணாலும் போகலாம் என்று ஆசிரியர் கூறியுள்ளனர் அதைத் தொடர்ந்து பள்ளி மாணவனை அழைத்துச் சென்று திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இதையடுத்து திருவல்லங்காடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/145589/Complaint-of-head-injury-after-the-teacher-hit-a-student-who-did-not-write-a-diary.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for Read the post

Featured Post

"I Am a Little Teapot" 3D Animated Nursery Rhyme – History, Importance & Benefits

I Am a Little Teapot Introduction "I Am a Little Teapot" is a popular nursery rhyme among young children. Recently, the Simple Kal...