ஈ.சி.ஆர். சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது எதிர்பாரதவிதமாக கார் மோதியதில் இரண்டு போலீசார் காயம் அடைந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலையில் இருந்தே மாமல்லபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேஷ் தலைமையில், சிறப்பு உதவி ஆய்வாளர் கார்த்திக் மற்றும் போக்குவரத்து போலீசார் இருவர் மற்றும் சிறப்பு காவல் படை காவலர்கள் மூன்று பேர் சேர்ந்து, ரேஸ் பைக், மற்றும் சந்தேகப்படும் வாகனங்களை தணிக்கை செய்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது, சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி வேகமாக வந்த கார், அங்கு சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் மீது மோதி அங்கிருந்த தடுப்பு பலகைகள் மற்றும் சோதனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீதும் மோதியது.
இதில் இருசக்கர வாகனம் அருகில் நின்ற போலீசார் யோகேஸ்வரன், சுரேஷ்குமார் ஆகிய இருவர் காயமடைந்தனர். இருவரையும் சக போலீசார் கோவளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். அதிஷ்டவசமாக போலீசார் இருவரும் உயிர் தப்பினர். மாமல்லபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/147906/2-policemen-were-injured-when-a-car-collided-with-them-while-conducting-a-traffic-inspection-on-the-ECR.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post