Translate

இந்த வலைப்பதிவில் தேடு

காஞ்சிபுரம்: எரிவாயு சிலிண்டர் கிடங்கில் பயங்கர தீ விபத்து - 2 பேர் பலி.!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர் கிடங்கில் நேரிட்ட தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களில் 2 பேர் உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக கிடங்கின் உரிமையாளர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரகடம் அருகே தேவரியம்பாக்கத்தில் உள்ள கிடங்கில், சமையல் சிலிண்டர்களை இறக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக, ஓர் சிலிண்டர் தவறி விழுந்து வெடித்துச் சிதறியதால் பற்றிய தீ கிடங்கு முழுவதும் பரவியது. கிடங்கின் அருகே நடந்து சென்றவர்களும் நெருப்பினால் பாதிக்கப்பட்டனர்.

image

தகவலின்பேரில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூரிலிருந்து 7 வாகனங்களில் சென்ற தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரத்துக்கும் மேல் போராடி நெருப்பைக் கட்டுப்படுத்தினர். விபத்தில் சிக்கி காயமுற்ற 12 பேர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்ன் சேர்க்கப்பட்டனர். இவர்களில் பலத்த காயமுற்ற ஏழு பேர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப் பட்டனர்.

image

விபத்து குறித்து 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள ஒரகடம் காவல்துறையினர், கிடங்கின் உரிமையாளர் அஜய்குமார், அவரது மனைவி ஆகிய இருவரையும் கைது
செய்தனர். இந்நிலையில் விபத்தில் காயம் அடைந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/148232/Kanchipuram--2-people-died-in-a-fire-at-a-cylinder-gas-depot-.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post