சேலத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணை குண்டு வீசிய வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் ராஜன் என்பவர் வீட்டில் இன்று அதிகாலை மண்ணெண்ணை நிரப்பிய பாட்டிலில் நெருப்பு பற்றவைத்து வீட்டின் முன்பு மர்ம நபர்கள் வீசியுள்ளனர். இதனால் எந்த சேதமும் ஏற்படவில்லை. இது தொடர்பாக ராஜன் அளித்த புகாரின்பேரில் ஏழு பேரை அழைத்து சென்ற காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
இதில் காதர்உசேன், சையத்அலி ஆகிய இருவர் மண்ணெண்ணை குண்டு வீசியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்து இருவர் மீதும் தீவைத்து பாதிப்பு ஏற்படுத்த முயற்சி செய்தல், நற்பெயருக்கு களங்கம் விளைவித்தல், மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவருக்கும் கொரோனா பரிசோதனைக்கு செய்து நீதிமன்ற காவலில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது... சேலம் மாநகரில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டின் மீது மண்ணெண்ணை குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக உடனடியாக வழக்குப் பதிவு செய்து சையதுஅலி, காதர் உசேன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து அவர்கள் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சேலம் மாநகரம் முழுவதும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது
இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் ஷெரிப்பாஷா, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா பொதுச் செயலாளர் முகமது ரஃபி, மற்றும் இஸ்லாமிய இயக்கத்தை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில், முகமதுஆரிஸ், காஜா உசேன் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/147942/Salem-7-people-arrested-including-two-who-bombed-the-house-of-an-RSS-leader.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post