வியாழன், 29 செப்டம்பர், 2022

கொடைக்கானல் வனச் சரணாலயத்திற்குள் ஹெலிகாப்டர் பறக்கலாமா, கூடாதா? அரசு விளக்க வேண்டும்

கொடைக்கானல் வனச் சரணாலயத்திற்குள் ஹெலிகாப்டர் பறக்கலாமா, கூடாதா என்ற விடை தெரியாமல் பொதுமக்கள் அச்சத்தல் உள்ளனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதியை, இந்தியாவின் 12-வது வன உயிர் சரணாலயமாக, தமிழக அரசு அறிவித்ததை அடுத்து மத்திய அரசின் ஒப்புதல் சமீபத்தில் வழங்கப்பட்டது.

பிரபல சுற்றுலா தலமான கொடைக்கானல் மலைப் பகுதியை வனச் சரணாலயமாக அறிவித்ததற்கு, விவசாய சங்கங்கள் பல்வேறு வழிகளில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வனச்சரணாலய திட்டம் செயல்படுத்தப்பட்டு, தற்பொழுது நடைமுறையில் உள்ளது.

வனச் சரணாலய சட்டத்தின்படி வனச் சரணாலய வனப்பகுதிக்கு மேல் வானில், ஹெலிகாப்டர் பறக்கத் தடை உள்ளதாகக் கூறும் இயற்கை ஆர்வலர்கள், இந்த தடையால் கொடைக்கானலில் ஹெலிகாப்டர் சுற்றுலாவை, செயல்படுத்த முடியாத நிலை உள்ளதாக கூறுகின்றனர்.

image

ஆனால் சமீப காலமாக கொடைக்கானல் வனச் சரணாலய வானில், அடிக்கடி ஹெலிகாப்டர் வருவதும், முக்கியஸ்தர்களை இறக்குவதும், செல்வதுமாக உள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று தனியார் உயர் ரக ஹெலிகாப்டர் ஒன்று, நகர்ப்புறத்தின் வெகு அருகாமையில், தாழ்வாக 6 முறைக்கு மேல் வட்டமடித்துச் சென்றது.

மிகவும் தாழ்வாக சென்ற ஹெலிகாப்டரால் நகரில் உள்ள பல வீடுகளில் அதிர்வுகள் உணரப்பட்டது. வனச் சரணாலய தடை செய்யப்பட்ட பகுதியில், ஹெலிகாப்டர் பறக்க அனுமதி உள்ளதா இல்லையா என்பதை, மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும் என்று, பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/148183/Kodaikanal-Can-helicopter-fly-inside-the-forest-sanctuary-or-not-Government-should-explain.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for Read the post

Featured Post

"I Am a Little Teapot" 3D Animated Nursery Rhyme – History, Importance & Benefits

I Am a Little Teapot Introduction "I Am a Little Teapot" is a popular nursery rhyme among young children. Recently, the Simple Kal...