உதகை - மேட்டுப்பாளையம் இடையிலான மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக கடந்த ஐந்தாம் தேதி கல்லார் மற்றும் ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கிடையே உள்ள இருப்பு பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பாறைகளை அகற்றும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்ததால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு இருந்தது. சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில் வழக்கம் போல் மலை ரயில் சேவை தொடங்கியது.
ஆனால் ரயில் சேவை தொடங்கப்படும் என முன்கூட்டியே அறிவிக்காததால், சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாகவே இருந்தது. இதனால் அரை மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/146769/Udhagai-to-Mettupalayam-mountain-train-service-again.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post