கிருஷ்ணகிரியில் ஒரு ரூபாய்க்கு புடவை வாங்க அதிகாலை முதல் குவிந்த பெண்கள் கூட்டம் முண்டியடித்து புடவைகளை வாங்கிச் சென்றனர்
கிருஷ்ணகிரியில் உள்ள பிரபல ஜவுளிக் கடையின் இன்று முதலாம் ஆண்டை முன்னிட்டு ஜவுளிக் கடைக்கு முதலில் வரும் 500 வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு புடவை, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச பேண்ட், ஷர்ட், மற்றும் பல்வேறு ஆபர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து அதிகாலை முதல் கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், முதியவர்கள், ஆண்கள், என ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடை திறப்பதற்கு முன்பாகவே வாசலில் காத்திருந்தனர். இதையடுத்து கடை திறந்தபின் அலைமோதிய மக்கள் முண்டியடித்துக் கொண்டு புடவைகளை வாங்க கடைக்குள் புகுந்து புடவைகளை வாங்கிச் சென்றனர்.
இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த ஜவுளிக்கடை நிறுவனம் சார்பில் 500-க்கும் மேற்பட்ட பணியாளர்களை நியமிக்கப்பட்டிருந்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/146970/Krishnagiri--Saree-for-one-rupees.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post