ஞாயிறு, 11 செப்டம்பர், 2022

"தாகம் தீர்வதற்காக சாக்கடையை குடிக்கக் கூடாது".. அரசியல் பேச்சால் அதிரவைத்த ஆளுநர் தமிழிசை

நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஒற்றுமை பற்றி மாநாடு நடத்தி விட்டார் விவேகானந்தர் ஆனால் நித்திரையில் இருந்தவர்கள் தற்போது ஒற்றுமைக்காக யாத்திரை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசினார்.

சென்னை மயிலாபூரில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தில் உலக சகோதரத்துவ தினவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், ஐஐடி இயக்குனர் காமகோடி, ராமகிருஷ்ண மடத்தின் துணைத் தலைவர் ஸ்ரீமத் சாமி கௌதமன் ஜி மகாராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசினார் அப்போது, "ராமசாமி என்றாலே ஏதோ தேசியத்திற்கு சம்பந்தம் இல்லை என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ராமசாமிகளால் தான் தேசியம் பாதுகாப்பாக உள்ளது..

image

உள்ளத்திலிருந்து உள்ளத்திற்கு செய்தி கிடைக்கிறது. வாயிலிருந்து வார்த்தை கிடைக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார் விவேகானதர். விவேகானந்தரின் சிகாக்கோ உரையை படித்தால் மட்டும் போதும் வாழ்க்கைக்கு மிகப்பெரிய வழிகாட்டுதல் கிடைத்துவிடும். பலவீனமாக நினைப்பது பாவம் என்று சொல்கிறார் விவேகானந்தர் சகோதரத்தை 1893 ஆம் ஆண்டிலேயே ஒற்றுமையை உலகிற்கு போதித்த நாடு. சிலர் நித்திரையில் இருந்து விட்டு இன்றைக்கு ஒற்றுமை பற்றி யாத்திரை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்

நாமெல்லாம் விழித்துப் பார்ப்பவர்கள் நமக்கு ஒற்றுமை பற்றி சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. மதித்தலும் சகித்தலும் விவேகானந்தர் சொல்லிக் கொடுத்துள்ளார் விநாயகர் அழுக்கில் இருந்து எடுக்கப்பட்டவர் என்று சொன்னதையும் நாம் சகித்துக் கொண்டிருக்கிறோம். சிவன் என்ன ஆட்டம் ஆடுகிறார் என்று கேலி பேசிக் கொண்டிருப்பதையும் சகித்துக் கொண்டிருக்கிறோம் பெரும்பான்மையினர் கொண்டாடும் ஒரு விழாவிற்கு வாழ்த்து சொல்லவில்லை என்பதையும் நாம் சகித்துக் கொண்டிருக்கிறோம்

image

என்னை பொருத்தமட்டில் பலவீனமாக இருப்பது பாவம் இது பெரியார் மண் என்பது முன்னிறுத்தப்பட்டு விடக்கூடாது என்பது நம்மை போன்றவர்களின் எண்ணம். இது ஆன்மீக பூமியும் தான். ஆளுநர்கள் எல்லாம் அரசியல் பேசலாமா? என்றால் பேசலாம், ஏனென்றால் நான் தமிழச்சி., தாகம் தீர்வதற்காக சாக்கடையை குடிக்கக் கூடாது.

இந்தியா பொருளாதாரத்தில் மீண்டெழுந்ததா? என்று எல்லோரும் கேட்கிறார்கள். கொள்ளை நோய் வந்து 2 ஆண்டுகள் உலகநாடுகள் எல்லாம் முடங்கி கிடந்தது. அதிலிருந்து மீண்டெழுந்து பொருளாதாரத்தில் உயர்ந்து வருகிறோம். குண்டூசி கூட விட்டுச் செல்லாதவர்களுக்கு நாம் தடுப்பூசி கொடுத்துள்ளோம். பக்தியும், சக்தியும் இளைஞர்களுக்கு வரவேண்டும் சிலர் சுயநலத்துக்காக நம்மை பிரித்தாளலாம். ஆனால், நாம் ஒற்றுமையாக இருப்போம் என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/147040/Vivekananda-had-held-a-unity-conference-a-hundred-years-ago--But-Tamilisai.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for Read the post

Featured Post

"I Am a Little Teapot" 3D Animated Nursery Rhyme – History, Importance & Benefits

I Am a Little Teapot Introduction "I Am a Little Teapot" is a popular nursery rhyme among young children. Recently, the Simple Kal...