அதிமுக தலைமை அலுவலக சாவி தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
முன்னதாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், `ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாத போது கட்சி அலுவலகத்தின் அதிகார உரிமையைக் கோர முடியாது. தலைமை அலுவலகத்தின் சாவியை தன் வசம் ஒப்படைக்கக் கோருவதில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. பண விவகாரங்களில் ஓபிஎஸ் கையாடல் செய்துள்ளார் என்றும் கையாடல் செய்த ஒருவரிடம் அலுவலகச் சாவியை ஒப்படைக்கக் கூடாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வன்முறையில் ஈடுபட்டதாகவும் ஈபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சிக்கு எதிராக நடக்கும் ஒருவர் அலுவலக நிர்வாக உரிமையை கோர முடியாது எனவும் அவரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ஈபிஎஸ் தரப்பின் பதில்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/147082/Hearing-on-OPS-petition-against-giving-AIADMK-office-key-to-EPS-in-Supreme-court-today.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post