மரக்காணம் அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி இறப்பில் மர்மம் இருப்பதாக பெற்றோர்கள் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கந்தாடு திரௌபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம், இவரது 14 வயது மகள், கந்தாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு மாணவி அவரது வீட்டில்; தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மரக்காணம் போலீசார், பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மாணவியின் பெற்றோர் வீட்டில் புதியதாக ஒரு செல்போன் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதைத் தொடர்ந்து செல்போனை பெற்றோர் வாங்கித் தரவில்லை எனவும், இது யார் மூலமாக வீட்டிற்கு வந்தது எனவும் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இச்சம்பவம் குறித்து மரக்காணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/147830/Villupuram-Student-commits-suicide-complaint-of-mystery-in-death.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post