உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடியில் ஊழியர்கள் போராட்டத்தால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கட்டணமின்றி கடந்து செல்கின்றன.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடியில் 126-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 26 பணியாளர்களை சுங்கச்சாவடி நிறுவனம் நேற்றுடன பணி ஒப்பந்தம் முடிந்து விட்டதாகக் கூறி பணி நீக்கம் செய்துள்ளனர்.
இந்நிலையில், இன்று வழக்கம் போல் பணிக்கு வந்தவர்களை பணி செய்ய அனுமதிக்காததால் அவர்களுக்கு ஆதரவாக மற்ற ஊழியர்களும் வசூல் மையத்தை பூட்டிவிட்டு சுங்கச்சாவடி அலுவலகத்தின் எதிரே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடி மையங்களில் பாஸ்ட் ட்ராக் முறை அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து சுங்கச்சாவடி ஒப்பந்த நிறுவனங்கள் இது போன்ற ஆள் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 26 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளனர்.
இதனை கண்டித்து சக ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பணம் செலுத்தாமல் சங்கசாவடியை கடந்து செல்கின்றன. தகவல் அறிந்த காவல் உதவி கண்காணிப்பாளர் மகேஷ் சம்பவ இடத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/148320/Protest-at-Ulundurpet-Tool-gate-in-support-of--employees.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post