தவறுகளை தட்டிக்கேட்டவர்களை அநாகரிகமாக பேசியதாக காவல்துறையை கண்டித்து கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்கள் மறியயில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டியில் மந்தகல் திடல் என்ற பகுதியை அப்பகுதி மக்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த நிலையில் அந்த பகுதியில் ஆக்கிரமிப்பு நடைபெற்றிருந்ததாகவும் அதனால் ஊர் மக்கள் தீர்மானம் நிறைவேற்றி மதில் சுவற்றை இடித்துள்ளதாக தெரிகிறது.
தகவல் அறிந்த கேளம்பாக்கம் உதவி ஆணையர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதி மக்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
அப்பொழுது திமுக, அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை காவல்துறையினர் மரியாதை குறைவாக பேசியாதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்களை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு வரக்கூடிய மார்க்கத்திலும், சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லக்கூடிய மார்க்கத்திலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் கடுமையான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/147029/uthandi-public-protest-at-ecr-after-humiliated-speech-by-police.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post