ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே ஒன்றரை வயது ஆண் குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரத்தை ஒரு மணி நேரமாக போராடி லாவகமாக வெட்டி எடுத்து குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே விசாலாட்சி தெருவை சேர்ந்தவர் ஜோனா. 30 வயதாகும் இவர் தனியார் தோல் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் ஜோவின் என்ற ஆண் குழந்தை உள்ளது. இன்று குழந்தை ஜோவின் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சாப்பாடு வைக்க பயன்படும் பாத்திரத்திற்குள் (குண்டான்) ஜோவின் தலை சிக்கியுள்ளது.
இந்த காட்சியைப் பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள், குழந்தையை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதோடு லாவகமாக தலையில் சிக்கியிருந்த பாத்திரத்தை வெட்டி எடுத்து குழந்தையை காப்பாற்றினர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/148846/The-doctors-fought-for-1-hour-to-remove-the-vessel-stuck-in-the-child-s-head.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post