Translate

இந்த வலைப்பதிவில் தேடு

அதிவேகமாக வந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – அண்ணன் தம்பி உட்பட 3 பேர் பலி

மாங்காடு அருகே அதிவேகமாக வந்த கார் கம்பிகளை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் விழுந்;த விபத்தில் அண்ணன் தம்பி உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்டச் சாலை, மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் அருகே இன்று காலை அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் சாலையோர இரும்பு தடுப்புகளை உடைத்துக் கொண்டு அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணம் செய்தவர்கள் பலத்த காயமடைந்தனர். இதை கண்டதும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

image

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், காரில் சிக்கியிருந்த மூன்று பேரை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்

விசாரணையில் விபத்தில் சிக்கியவர்கள் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ரமேஷ்பாபு, சுரேஷ்பாபு, சுதாகர் என்பதும் இதில் ரமேஷ்பாபு, சுரேஷ்பாபு ஆகிய இருவரும் சகோதரர்கள் என்பதும் அதிமுகவை சேர்ந்த இவர்கள் தொழிலதிபர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் காரில் வந்த வெங்கடேசன், ராஜவேலு ஆகிய இருவரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

image

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விபத்து ஏற்பட்ட பகுதியில் போதிய எச்சரிக்கை பதாகைகள், ஒளிரும் ஸ்டிக்கர்கள் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/149332/A-speeding-car-overturned-in-a-ditch-and-3-people-died-including-brother.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post