ஓசூரில் அடையாளம் தெரியாத வாகனத்தின் மீது மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஓமலூர் அருகேயுள்ள கிழக்கத்திகாடு கிராமத்தைச் சேர்ந்த அமிர்தராஜ் என்பவரது மகன் பிரவீன் குமார் (24) கடலூர் மாவட்டம் வேம்பூர் தாலுகா மாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவரது மகன் சுதாகரன் (24) மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள நாமத்தோடு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் ராஜபாண்டி (23) ஆகிய மூவரும் ஓசூர் பகுதியில் அறை எடுத்து தங்கி கர்நாடக தமிழக எல்லை பகுதியான பல்லூரில் இயங்கி வரும் தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், நேற்றிரவு பணி முடிந்ததும் பிரவீன் குமார், சுதாகரன், ராஜபாண்டி ஆகிய மூன்று பேரும் கர்நாடக மாநில எல்லை பகுதிக்குச் சென்று மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் 3 பேரும் அங்கிருந்து நள்ளிரவுக்கு மேல் இருசக்கர வாகனத்தில் ஓசூரில் உள்ள தங்களது இருப்பிடத்திற்குச் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது ஓசூர் தர்கா பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது அவர்கள் சென்ற இருசக்கர வாகனம் முன்னால் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மீதி மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து அறிந்த ஓசூர் அட்கோ போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று காயம் அடைந்த மூன்று பேரையும் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பிரவீன் குமார் மற்றும் சுதாகர் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். ராஜபாண்டி பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து. ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/148326/Hosur-Two-killed-in-two-wheeler-collision-with-unidentified-vehicle.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post