கோவை மாவட்டத்தில் ரவுடிகள் மற்றும் ரவுடிசத்தில் ஈடுபடும் நபர்களை கட்டுப்படுத்தும் வகையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் காவல்துறையினர் ரவுடிசத்தில் ஈடுபடும் ரவுடிகளின் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதன் அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களில் 88 ரவுடிகளின் மீது காவல் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 9 நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ரவுடிசத்தில் ஈடுபட்ட 62 ரவுடிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் அவர்களின் மீது நன்னடத்தை பிணையம் பெறப்பட்டு கண்காணிக்கப்பட்டும், 17 ரவுடிகளின் மீது பிடியாணை நிறைவேற்றப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் கோவை மாவட்டத்தில் ரவுடிசத்தில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து அவர்களின் மீதான இந்த மின்னல் வேட்டை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/148869/Lightning-hunting-action-in-Coimbatore-district--Police-action-against-the-raiders.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post