சேலத்தில் மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவான கணவனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
சேலம் சீலநாயக்கன்பட்டி வேலுநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜசேகரன் - கார்த்திகை செல்வி தம்பதியர். இவர்களுக்கு 10 வயதில் மகள் ஒருவர் உள்ளார். தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வரும் ராஜசேகரன், நேற்று வழக்கம்போல் வீட்டில் மனைவி மகளுடன் தூங்கச் சென்றுள்ளார்.
இந்நிலையில், இன்று அதிகாலை மகள் கண் விழித்து பார்த்தபோது தாய் முகத்தில் ரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் மகள். சிறுமி கூச்சலிட்டதை கேட்டு, அவரது பக்கத்து வீட்டுக்காரர்கள் சென்று பார்த்துவிட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, அருகில் குடியிருக்கும் சித்தப்பாவிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் அன்னதானப்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ராஜசேகரனை தேடி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி கட்சிகளின் அடிப்படையில் அதிகாலை இரண்டு மணி அளவில் ராஜசேகரன் தப்பிச் சென்றது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/149011/Police-investigation-starts-on-Salem-lady-murder-with-the-help-of-CCTV-footage.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post