சனி, 8 அக்டோபர், 2022

`பதிலுக்கு பதில் பேசாமல், அன்பால் திமுக அவப்பிரச்சாரத்தை முறியடிப்பதே என் பணி’- அண்ணாமலை!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டர் ஸ்பேசஸில் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், `’என்றார்.

தனது பேட்டியில் அவர் பின்வரும் கருத்துகளையும் கூறியுள்ளார். "உலகில் உள்ள மதங்களுக்கெல்லாம் தாய் மதம், இந்து மதம்! சொல்லப்போனால் இந்து என்பது மதமல்ல; வாழ்வியல் முறை. பஞ்சபூதங்களை அடிப்படையாகக் கொண்ட வாழ்வியல் முறைக்கு, ஆங்கிலேயர்கள் தான் இந்து மதம் என்று பெயர் வைத்தனர். ராஜராஜசோழன் இந்துவா என்று சிலர் இன்று பேசுகின்றனர். இந்து வாழ்வியல் முறை, பஞ்சபூத ஆராதனை போன்றவற்றை ராஜராஜசோழன் பின்பற்றினார். அதனால் அவர் இந்து தான்.

image

ராஜராஜசோழன் இந்துவா என்ற சர்ச்சைப்பேச்சு தான், இன்றைய இளைஞர்கள் மத்தியில் இந்து வாழ்வியல் முறையை எடுத்துச்செல்ல உதவுகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் இந்து வாழ்வியலை இளைஞர்கள் மத்தியில் கொண்டுசெல்ல முடிகிறது. ராஜராஜசோழன் இந்துவா என்பது தேவையில்லாத சர்ச்சை; இதனால் யாருக்கும் பயனில்லை.

13-வது அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தை இலங்கை அமல்படுத்த தவறிவிட்டது; இலங்கையின் செயல்பாடுகள் இந்தியாவுக்கு திருப்தியளிக்கவில்லை. இலங்கையின் அமைப்பில் இந்தியா எந்தவித சமரசத்தையும் செய்துகொள்ள விரும்பவில்லை. உக்ரைன் - ரஷ்யா போரில் இந்தியாவின் நிலைப்பாடு தான் சிறந்தது என்று ஐ.நா.சபையில் பல நாடுகள் தெரிவித்துள்ளன. அதேபோல், இலங்கைக்கு எதிராகவும் இந்தியா வாக்களிக்கவில்லை. இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தால், அங்கு தமிழர்களின் உரிமைகள் பற்றி இந்தியாவால் பேச முடியாது. இந்தியா இலங்கைக்கு 60,000 வீடுகளை கட்டித்தந்துள்ளது.

image

யாழ்ப்பாணம் - கொழும்பு இடையே ரயில் சேவை, கலாச்சார மையங்கள் போன்றவற்றை இந்தியா செய்துதந்துள்ளது. இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு, பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்வுகாண முடியும்; அதைத்தான் இந்தியா செய்துகொண்டுள்ளது. லங்கையும் நன்றாக இருக்க வேண்டும் ; இந்தியாவும் நன்றாக இருக்க வேண்டும்; அதுவே மத்திய அரசின் நிலைப்பாடு. இலங்கையை சீனா போன்ற நாடுகள் ஆதிக்க களமாக பயன்படுத்துவதை இந்தியா ஏற்றுக்கொள்ளாது.

தமிழ்நாட்டில் உள்ள சில தலைவர்கள் தமிழ்நாட்டு அரசிலும், இந்திய அரசிலும் ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது; அதனால் அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். இலங்கை பிரச்சனைக்கு பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே தீர்வுகாண முடியும்.

image

தமிழ்நாட்டு அமைச்சர்கள் யாரும் அவரவர்களின் பணியை சீரியசாக எடுத்து செய்வதில்லை. அமைச்சர்களின் உள்ளத்தில் இருப்பதே, வார்த்தைகளாக வெளியில் வருகிறது. `ஓசியில் தானே போகிறீர்கள்’ என்று கேட்பது அமைச்சரின் உள்ளத்தில் இருந்து வந்தது தான். திமுகவினர் என்ன பேசினாலும் அது எப்படி சர்ச்சையாகிறது என்று திமுகவினரே என்னிடம் கேட்டனர். திமுகவினர் பேசுவதெல்லாம் அனைவராலும் கவனிக்கப்படுவதால் தான் அது சர்ச்சையாகிறது.

சமூகவலைதளங்களை அனைவரும் பயன்படுத்துவதால், இந்த ஆட்சியில் திமுகவினரின் உண்மைத்தன்மை எளிதில் அம்பலப்பட்டுவிடுகிறது. சமூகநீதி என்பதை பெயரளவில் வைத்துவிட்டு, திமுகவினர் ஆட்சி நடத்துகின்றனர். ஆனால் திமுகவினரே சமூகநீதியை கடைபிடிப்பதில்லை. திமுக ஆட்சி மீது மக்கள் நம்பிக்கையிழந்துவிட்டனர்.

image

ஸ்டாலின் வீட்டில்தான் அவரை சூப்பர் முதல்வர் இருக்கின்றனர். அவர்கள் தான் அரசை இயக்கி வருகின்றனர். ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்பது மட்டும் தான் அமைச்சர்களின் வேலையாக இருக்கிறது. திரைமறைவில் இருந்து சூப்பர் சி.எம்.களாக செயல்படுபவர்கள் தான் நன்றாக சம்பாதிக்கின்றனர்.

நான் அமெரிக்க பயணத்தில் உள்ளேன். தனிப்பட்ட விவகாரங்களை பொதுவெளியில் பேசக்கூடாது என்றே நினைத்தாலும், இதுகுறித்து கேள்வி எழுந்திருப்பதால் பேசுகிறேன். மேற்படிப்பு படிப்பதற்காகவே அமெரிக்கா வந்துள்ளேன். Fellowship-க்காக ஏற்பட்ட நிர்பந்தத்தால் அமெரிக்கா வந்துள்ளேன். அரசியல் என்பது முழுநேர வேலையாக இருக்கக் கூடாது என்று காந்தி சொல்லியிருக்கிறார். நாம் சம்பாதிக்கும் பணம், என் உழைப்பால் வர வேண்டும் என்ற என்னுடைய எண்ணத்துக்கு, என் படிப்பு தான் உதவியாக இருக்கும்.

image

படிப்புக்காக நான் பயணப்பட்டிருப்பதை மாற்றிக்கூறி, சிலர் வதந்தி பரப்பிவருகின்றனர். திமுக-வினர் சுமத்தாத குற்றச்சாட்டே கிடையாது. `நான் ஐ.பி.எஸ்-ஏ படிக்கவில்லை, அவரை ஐ.பி.எஸ். ஆக்கியது RSS தான்’ என்றெல்லாம் திமுகவினர் பேசினார்கள். IPS எனக்கு ஒரு பெரிய தகுதி என்று சொல்ல முடியாது. நான் நல்ல விவசாயி; அவ்வளவு தான். IPS ஒரு தேர்வு... அவ்வளவு தான்... அதில் தேர்ச்சி பெறுவதெல்லாம் சாதனையல்ல. காமராஜர் என்ன படித்தார்? ஆகவே படிப்பை வைத்து விவாதிக்க வேண்டிய அவசியமே இல்லை. இதுபோன்ற தேவையற்ற பேச்சுகளுக்கு கருத்து சொல்லி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

ரூ.5,000 கோடியை முதலீடு செய்ய நான் அமெரிக்கா வந்தேன் என்று அவப்பிரச்சாரம் செய்கிறது திமுக. பதிலுக்கு பதில் பேசாமல் அன்பால், வேலையால் திமுகவினரின் அவப்பிரச்சாரத்தை முறியடிப்பதே என் பணி. பாஜகவை வளர்த்தெடுத்து, அடுத்தகட்ட தலைவர்களை உருவாக்கி, நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவதே என் கனவு. என் உழைப்பு தான் நான் யார் என்பதை உணர்த்தும். எனக்கு பின் தமிழ்நாடு அடுத்தகட்ட உயரத்தை அடையவேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். எனக்கு தமிழ்நாட்டை கலிபோர்னியா போல் வளர்த்தெடுப்பதில் தான் என் கவனமெல்லாம் உள்ளது" என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/148799/BJP-Annamalai-says-his-mission-is-to-defeat-the-DMK-campaign-with-love.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for Read the post

Featured Post

"I Am a Little Teapot" 3D Animated Nursery Rhyme – History, Importance & Benefits

I Am a Little Teapot Introduction "I Am a Little Teapot" is a popular nursery rhyme among young children. Recently, the Simple Kal...