சேலம் மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்த பெட்ரோல் பங்கிற்கு சீல் வைக்கப்பட்டதோடு, 1400 லிட்டர் பெட்ரோல் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வீரகனூர் பகுதியில் விஜயகுமார் என்பவருக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பெட்ரோல் பங்கில் பெட்ரோல், டீசல் போட்ட 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பழுதாகின. இதனால் பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டு இது குறித்து கேட்டனர். முறையான பதில் வராததால் இது குறித்து சேலம் குடிமைப்பொருள் வழங்கல் துறைக்கு புகார் சென்றது.
புகாரின் அடிப்படையில் சேலம் குடிமைப்பொருள் வழங்கள் குற்றப் பொருளாய்வுத் துறை டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில், பெட்ரோல் பங்க் உரிமம் இல்லாமல் நடத்தி வந்தது தெரியவந்தது. இது குறித்து வீரகனூர் கிராம நிர்வாக அலுவலர் கலியமூர்த்தி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர் அப்போது உரிமம் இல்லாமல் கடந்த ஒரு வருடமாக பங்க் நடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து பங்கிற்கு சீல் வைத்த அதிகாரிகள், 1400 லிட்டர் பெட்ரோலை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து தலைமறைவாக உள்ள பங்க் உரிமையாளர் விஜயகுமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/148739/Salem---Unlicensed-Petrol-station-exposed.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post