சங்கரன்கோவில் அருகே விவசாயியின் பேச்சைக் கேட்டு ஆடும் மயிலின் வீடியோ காட்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள இருமன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணியன். இவரது விவசாய தோட்டத்திற்கு தினந்தோறும் வரும் மயிலுக்கு உணவளித்து வருகிறார்.
இந்நிலையில் ஒருநாள் அவரது விவசாய தோட்டத்திற்கு வந்த உறவினர் சந்திரன் என்பவர் மயிலை ஆட சொன்னவுடன் அந்த மயில் ஆடியது. சாப்பிடு என்று சொன்னவுடன் சாப்பிட்டது. இதை அவர் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த காட்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/148804/A-colored-peacock-with-its-toga-spread-as-the-farmer-says.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post