மாணவி சத்யா கொலை வழக்கில் கைதான சதீஷை வழக்கு விசாரணைக்கு இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்யபிரியா என்ற மாணவியை சதீஷ் என்பவர் தண்டவாளத்தில் தள்ளிவிட்டு படுகொலை செய்தார். இதைத்தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவம் நடந்த 12 மணி நேரத்தில் கொலையாளி சதீஷை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் சதீஷ் ஏற்கனவே மூன்று முறை சத்யாவிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறை முறையாக நடவடிக்கை எடுக்காததால், இந்த கொலை காரணமாக அமைந்துள்ளது என பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுந்தது.
குறிப்பாக கடந்த மே மாதம் மாம்பலம் காவல் நிலையத்தில் சத்யாவை கல்லூரியில் தாக்கியது தொடர்பாக சதீஷ் மீது சாதாரண பிரிவுகளில் மட்டுமே வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டது முதல் தகவல் அறிக்கை மூலம் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து கல்லூரி மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணையை மேற்கொண்டு வந்தனர். அதன்படி ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மற்றும் பணியாளர்களிடமும் விசாரணை செய்ததாகவும், சதிஷ் தள்ளிவிடும் போது பார்த்த சாட்சியங்களிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தியதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் சதீஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் சதீஷை காணொளியில் ஆஜர்படுத்த அனுமதிக்குமாறு சிபிசிஐடி தரப்பில் வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்திருந்தது. இன்று காலை 11மணிக்கு நேரில் ஆஜர்படுத்த சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/149731/Court-Order-to-produce-Satish-in-court.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post