Translate

இந்த வலைப்பதிவில் தேடு

சாலையை கடக்க முயன்ற சிறுமி மீது டிப்பர் லாரி மோதி விபத்து – புதுக்கோட்டையில் சோகம்

புதுக்கோட்டை அருகே டிப்பர் லாரி மோதி 13 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை அருகே உள்ள சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலு என்பவரது மகள் காயத்ரி (13). இவர் இன்று தனது வீட்டிலிருந்து எதிரே உள்ள புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி நோக்கிச் சென்ற டிப்பர் லாரி காயத்ரியின் மேல் ஏறியது. இதில் காயத்ரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

image

இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் மரங்களை போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து உடனடியாக அங்கு வந்த வல்லத்திராகோட்டை போலீசார் சிறுமியின் உறவினர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமரசம் செய்தனர். பின்னர் சிறுமியின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

image

இதைத்தொடர்ந்து டிப்பர் லாரி ஓட்டுநரான நல்லபுடையான்பட்டியைச் சேர்ந்த தங்கராசு மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/149894/Girl-dead-for-accident-near-Pudukkottai.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post