ஆதார் என்றால் என்ன?
- இந்தியாவில் குடியிருப்பவருக்கு இலவசமாக UIDAI வழங்கிய 12 இலக்க அடையாள எண் ஆதார்
- இந்த ஆதார் அடையாள அட்டை. பல்வேறு ஆவணங்களை பெறுவதற்கும், பல்வேறு ஆவணங்களுக்கு மாற்றாகவும் உள்ளது
- இந்த ஆதார். கண், கைரேகை போன்ற பயோ தகவல்களை பெற்று இந்த அடையாள அட்டை தயாரிக்கப்படுகிறது.
- இதில் உள்ள 16 இலக்க எண் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
- இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும், வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த ஆதார் அடையாள அட்டை. பல்வேறு ஆவணங்களை பெறுவதற்கும், ஆவணங்களுக்கு மாற்றாகவும் தேவையாக உள்ளது
ஆதார் ஏன் தேவைப்படுகிறது ?
- இதனை வைத்துக் கொண்டு நீங்கள் வாக்களிப்பது முதல், வரிசெலுத்துதல் வரை அனைத்தும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- வருமான வரி தாக்கல் செய்ய, நிரந்தர கணக்கு அட்டை எண் (PAN) வாங்க, பி.எஃப். மூலமாக ஓய்வூதியம் பெற, வீட்டு சமையல் எரிவாயு இணைப்பினை பெற, பாஸ்போர்ட் பெற, மத்திய/மாநில அரசுகள் அளிக்கும் நலத்திட்டங்கள் மற்றும் நிதி உதவியினைப் பெற நமக்கு ஆதார் கார்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டையை எப்படி பெறுவது ?
- உங்களுக்கு அருகில் இருக்கும் CSC, போஸ்ட் ஆபீஸ், பேங்க் ஆதார் பதிவு மையங்களுக்கு (Aadhaar enrolment center) செல்லுங்கள்.
- அங்கு உங்களுக்கு அளிக்கப்படும் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து பயோமெட்ரிக் தகவல்களையும் பதிவு செய்யுங்கள்.
- பிறகு உங்களின் பிறப்பு, குடியிருப்பு, மற்றும் இன்னப்பிற ஆவணங்களின் அசல் மற்றும் நகல்கள் பரீசிலிக்கப்பட்டு, சரிபார்க்கப்படும். இந்த நடைமுறை அனைவருக்கும் ஒன்று தான்.
- பிறகு 14-digit enrolment number கூடிய ரசீது தரப்படும். அதனை பயன்படுத்தி நீங்கள் உங்களின் ஆதார் அட்டையின் ஸ்டேட்டஸை அறிந்து கொள்ளலாம்.
ஆதார் ஸ்டேட்டஸை அறிந்து கொள்வது எப்படி ?
- uidai.gov.in இணையத்திற்கு செல்லவும்.
- தளத்தை ஓபன் செய்துகொள்ளுங்கள்.
- ஆதார் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
- பின்னர் அதில் செக் ஆதார் ஸ்டேட்டஸ் ஆப்ஷன் தோன்றும்.
அதில் உங்கள் கார்டின் 14 இலக்கு எண்ட்ரோல்மெண்ட் எண்ணை பதிவு செய்து, செக்யூரிட்டி கோடு எண்களையும் என்டர் செய்து செக் ஸ்டேட்டஸ் கிளிக் செய்து உங்களின் உங்களின் ஆதார் ஸ்டேட்டஸ் விபரங்களை அறிந்துகொள்ளலாம்.
ஆதார் அட்டையை டவுன்லோடு செய்வது எப்படி ?
- ஆதார் அட்டை விரைவில் கிடைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், UIDAI இணையத்திற்கு சென்று, இ-ஆதார் அட்டையாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கு உங்களிடம் 14-digit enrolment number இருக்க வேண்டும்.
- முதலில் அந்த படிவத்தில் enrolment number-ஐ பதிவு செய்ய வேண்டும். பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதி மற்றும் நேரத்தினை குறிப்பிட வேண்டும்.
- பின்னர் உங்களின் பெயர், பின்கோடு, மற்றும் நீங்கள் உங்கள் விண்ணப்பத்தில் பதிவு செய்த மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
- ஆதார் அட்டை எண் உங்களுக்கு UIDAI மூலம் முன்பே குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அதனை பயன்படுத்தியும் நீங்கள் உங்கள் ஆதாரை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
- உங்களின் பெயர், பின்கோடு, மற்றும் மொபைல் எண்ணுடம், ஆதார் எண்ணை உள்ளீடாக தரவும்.
ஆதார் அட்டை - மொபைல் நம்பரை இணைப்பது எப்படி ?
நீங்கள் உங்களின் ஆதார் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போதே, மொபைல் எண்ணையும் சேர்த்து தான் பதிவிடுவீர்கள். உங்களின் ஆதார் ஸ்டேட்டஸ் மற்றும் ஆதார் தொடர்பான அப்டேட்டுகள், ஒன் – டைம் பாஸ்வேர்ட் ஆகியவற்றை பெற இந்த எண்ணை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்துவது அவசியமாகிறது.
ஆதார் பதிவு செய்யும் போது நீங்கள் உங்களின் போன் நம்பரை பதிவு செய்யவில்லை என்றால், அருகில் இருக்கும் ஆதார் மையத்திற்கு செல்லுங்கள். உங்களின் ஆதார் எண்ட்ரோல்மெண்ட் எண்ணுடன் உங்களின் மொபைல் நம்பரை இணைத்து தரவும். இதற்கு 30 முதல் 100 வரை கட்டணமாக வசூலிக்கப்படும்.
ஆதாரில் போன் நம்பர் மற்றும் முகவரியை மாற்றுவது எப்படி ?
UIDAI இணையத்திற்கு செல்லவும். அதில் மை ஆதார் என்ற டேக்கின் கீழ் அப்டேட் ஆதார் என்று இருக்கும் அதில் நீங்கள் உங்களின் முகவரி மற்றும் இதர தகவல்களை மாற்றிக் கொள்ளலாம்.
- உங்கள் ஆதார் அட்டையில் பெயர், வயது, பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட எதிலேனும் தவறுகள் இருப்பின் அவற்றை எளிதில் சரி செய்துக்கொள்ள முடியும்.
- சிலவற்றை இணையத்திலேயே சரி செய்யும் வசதியை UIDAI செய்துள்ளது.
- UIDAIன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆதார் அப்டேட் என்ற ஆப்ஷன் இடம் பெற்றிருக்கும்.
- அதில் லாக்இன் செய்து பின்னர் முகவரியில் இருக்கும் தகவல்களை சரி செய்யலாம்.
- இதேபோல முகவரியை மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் இதே வழியை பின்பற்றலாம்.
- முகவரியை தவிர வேறு தகவல்களில் பிழை இருந்தால் அவற்றை அருகில் உள்ள ஆதார் மையங்களுக்கு சென்று சரி செய்யலாம். UIDAI இணையதளத்திலேயே உங்கள் முகவரியை வைத்து அருகில் உள்ள ஆதார் மையத்தை கண்டறியலாம்.
இதனை எப்படி செய்வது?
- உங்கள் ஆதார் அட்டையின் எண்ணை பயன்படுத்தி, ஆதார் அட்டை ஆன்லைன் தளமான https://uidai.gov.in/ செல்ல வேண்டும்.
- நீங்கள் மாற்றம் செய்ய விரும்பும் விவரத்தை, பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி, மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் ஐடி ஆகியவற்றில் இருந்து தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும்.
- நீங்கள் திருத்தம் செய்ய அல்லது மாற்றம் செய்ய விரும்பும் விவரங்களைக் கொண்ட அடையாள ஆவணத்தை ஸ்கேன் செய்து, சொந்த கையெழுத்திட்ட நகலுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி, மொபைல் நம்பர் அல்லது மின்னஞ்சல் ஐடி ஆகியவை தொடர்புடைய மாற்றம் செய்ய வேண்டிய அல்லது திருத்தம் செய்ய வேண்டிய கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, ஆதார் அட்டையின் புதுப்பிப்பு விண்ணப்பத்திற்கான எண் அளிக்கப்படும்.
இந்த எண் மூலம் நீங்கள் செய்ய விண்ணப்பித்த மாற்றம் அல்லது திருத்தம், எந்த நிலையில் உள்ளது என்பதை கண்காணிக்க பயன்படுத்தி கொள்ளலாம். ஆதார் அட்டை தொடர்பான புதுப்பிப்புகளைச் செய்ய 90 நாட்கள் வரையிலான காலஅளவை எடுத்து கொள்ளலாம் என்று யூஐடிஏஐ இணையதளம் குறிப்பிடுகிறது.
பான் கார்ட்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? அதன் விளைவுகள்.
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது. வருமான வரி பிடித்தத்தை திரும்பப் பெறவும் முடியாது. வங்கிக் கணக்கு தொடங்குவது போன்ற பல தேவைகளுக்கு பான் கார்டு முக்கிய ஆவணமாக இருப்பதால் பல வகைகளில் சிக்கல் ஏற்படும்.
வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யும் போதே, ஆதார் அட்டை மற்றும் பேன் கார்ட்டை இணையத்தில் இணைத்துக்கொள்ளலாம். இதற்கு tin-nsdl.com மற்றும் utiitsl.com லிங்குகளை பயன்படுத்தலாம்.
எஸ்எம்எஸ் வழி: 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு UIDPAN <12-digit Aadhaar> <10-digit PAN> என அனுப்பவேண்டும்.
இணையதளம்: https://www.incometax.gov.in/iec/foportal என்ற இணையதளத்தை பயன்படுத்த இதனை செய்யலாம். இதில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தில் “link Aadhaar” என்பதை கிளிக் செய்து இதனை செய்யலாம். பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள ஆதார் எண், பான் எண், ஆதார் பெயர் ஆகியவற்றை குறிப்பிடவும்.
‘பான்’ எண்ணுடன் ‘ஆதார்’ எண்ணை இணைக்க பான் கார்டு எண், ஆதார் எண் மற்றும் ஆதார் அடையாள அட்டையில் கொடுக்கப்பட்ட சரியான பெயரை கொடுக்கவேண்டும். வருமான வரித்துறை வழங்கி உள்ள அறிவுரையின்படி, ஆதார் திட்டத்தை ஒருங்கிணக்கும் இந்திய பிரத்யேக அடையாள எண் ஆணையம் யுஐடிஏஐ சோதனை செய்தபின்னர், இணைப்பு உறுதிசெய்யப்படும்.
ஆதார் எண்ணில் கொடுத்த பெயருக்கும் பான் எண்ணில் உள்ள பெயருக்கும் இடையே ஸ்பெல்லிங் வேறுபாடு இருக்குமாயின் இணைப்பு தோல்வியடையும். வரிசெலுத்துவோர் ஆதார் பெயரையோ அல்லது பான் பெயரையோ திருத்த வேண்டியிருக்கும், அதாவது ஆதார் தரவுப்பெட்டகத்திலோ பான் தரவுப் பெட்டகத்திலோ ஸ்பெல்லிங்கைத் திருத்த வேண்டியிருக்கும்.
வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?
உங்கள் கிளைக்கு சென்று, உங்களின் ஆதார் அடையாள அட்டையின் நகல் கொடுத்தால் வங்கியிலேயே அடையாள அட்டை எண் வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்டுவிடும். இணைய வங்கி சேவைகளில் இது போன்ற ஆப்சன் இருப்பதால் நீங்கள் வங்கிக்கு செல்லாமலே உங்களின் ஆதார் எண்ணை இணைத்துவிட இயலும். இது வங்கிக்கு வங்கி மாறுபடும்.
☝
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post