வெள்ளி, 12 நவம்பர், 2021

IRCTC | SBI - கிரெடிட் கார்டின் ஃப்ரீ ரயில் டிக்கெட் - பிரீமியம் ரயில்வே ஓய்வறை சலுகை


 பாரத ஸ்டேட் வங்கி பலவிதமான கிரெடிட் கார்டுகளை வழங்குகிறது, குறைந்த நிதிக் கட்டணங்கள் முதல் சிறந்த வெகுமதித் திட்டம் வரை, SBI கிரெடிட் கார்டுகள் பல நன்மைகளை வழங்குகின்றன. 

 இப்போது  IRCTC உடன் இணைந்து தொடங்கப்பட்ட இந்த SBI கிரெடிட் கார்டு பயனர்களுக்கு குறைந்தபட்ச வருடாந்திர கட்டணத்தில் பல பயண நன்மைகளை வழங்குகிறது. இது IRCTC மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது மதிப்பு திரும்பப் பெறும் பலன்களையும் மற்ற வாங்குதல்களுக்கான வெகுமதிகளையும் வழங்குகிறது. அவற்றை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.

இலவச ரயில் டிக்கெட் முதல் பிரீமியம் ரயில்வே வெயிடிங் ஹால் வரை, IRCTC-யின் SBI Credit Card வசதி மூலம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காகவே, IRCTC நிறுவனமும், SBI  நிறுவனமும் இணைந்து இந்த கார்டை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த கார்டை பெற விரும்புவோர் எஸ்பிஐ கார்டு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஐஆர்சிடிசி இணையத்தில் - எஸ்பிஐ ரூபே கிரேடிட் கார்டின் பலன்கள் :

  • கார்டு வைத்திருக்கும் நபர் பரிசுப் புள்ளிகளை (Reward points) வைத்து இலவசமாகவே ரயில் டிக்கெட்டை நம்கோ அல்லது தெரிந்தவர்களுக்கு புக்கிங் செய்யலாம்
  • ஐஆர்சிடிசி மூலம் ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும்போது பரிசுப் புள்ளிகளில் 10% வரை வேல்யூ பேக் சலுகை பெற முடியும். ஒரு பரிசுப் புள்ளியின் மதிப்பு 1 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
  • முதல் 450 நாட்களில் 500 ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்தால் 350 போனஸ் பரிசுப் புள்ளிகள் கிடைக்கும்.
  • இந்த கார்டு வைத்திருப்பவர் premium railway lounge வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் பெட்ரோல், டீசல் போடும்போது இந்த கார்டை பயன்படுத்தினால் கூடுதல் கட்டணத்தில் (fuel surcharge)  1% தள்ளுபடி கிடைக்கும்.

எஸ்பிஐ கிரெடிட் கார்டை வாங்குவது எப்படி?

  • முதலில் ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையபக்கத்திற்கு https://www.irctc.co.in/nget/train-search  செல்ல வேண்டும்.
  • அதில், Promotions’ tab-ஐ கிளிக்செய்ய வேண்டும்.
  • அடுத்ததாக, அதில் SBI credit card ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • தொடர்ந்து, ஐஆர்சிடிசி எஸ்பிஐ கிரெடிட் கார்டை பெற அப்ளை கொடுக்க வேண்டும்.
  • அதில், கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்து, சப்மிட் கொடுக்க வேண்டும்.
இதுதொடர்பான கூடுதல் தகவல்களை IRCTC இணையதளத்தில் காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for Read the post

Featured Post

"I Am a Little Teapot" 3D Animated Nursery Rhyme – History, Importance & Benefits

I Am a Little Teapot Introduction "I Am a Little Teapot" is a popular nursery rhyme among young children. Recently, the Simple Kal...