எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) உதவி சப் இன்ஸ்பெக்டர் (ASI), தலைமைக் காவலர் (HC) மற்றும் காவலர் (Constable) ஆகிய 72 காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பலாம். ஆர்வமுள்ளவர்கள் BSF பதவிகளுக்கு தகுதியானவர்களா இல்லையா என்பதைச் சரிபார்க்க கீழே உள்ள அனைத்து விவரங்களையும் படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கியது. BSF ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி டிசம்பர் 29, 2021 ஆகும்.
காலிப்பணியிடங்களுக்கான விவரம்:
ASI(DM Gde-III) | 1 | |
---|---|---|
HC (Carpenter) | : | 4 |
HC (Plumber) | : | 2 |
கான்ஸ்டபிள் (Sewerman) | : | 2 |
கான்ஸ்டபிள் (ஜெனரேட்டர் ஆப்பரேட்டர்) | : | 24 |
கான்ஸ்டபிள் (ஜெனரேட்டர் மெக்கானிக்) | : | 28 |
கான்ஸ்டபிள் (லைன்மேன்) | : | 11 |
கல்வி தகுதி & வயது வரம்பு:
- மத்திய அல்லது மாநில அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து 10-வது தேர்ச்சி மற்றும் டிப்ளமோ அல்லது அதற்கு சமமான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரருக்கான வயது வரம்பு குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 25 ஆகவும் இருக்க வேண்டும்.
- இடஒதுக்கீடு பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
விவரம்:
அமைப்பின் பெயர் | எல்லைப் பாதுகாப்புப் படை |
---|---|
காலியிடங்களின் எண்ணிக்கை | 72 |
போஸ்ட் பெயர் : குரூப் | C |
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 15 நவம்பர் 2021 |
விண்ணப்பத்தின் கடைசி தேதி | 29 டிசம்பர் 2021 |
வேலை வகை | மத்திய அரசு வேலை |
பணி நியமன இடம் | இந்தியா முழுவதும் |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | bsf.gov.in/Home |
தேர்வு செய்யப்படும் முறை:
- எழுத்துத் தேர்வு
- ஆவணப்படுத்தல்
- உடல் தரநிலை சோதனை
- உடல் திறன் சோதனை
- நடைமுறை/வர்த்தக சோதனை
- மருத்துவ பரிசோதனை
சம்பளம் விவரம்:
- ASI - பே மேட்ரிக்ஸ் லெவல்-5 யின் கீழ் 7வது CPC இன் படி குறைந்தபட்சம் சம்பளம் ரூ.29,200, அதிகபட்சம் 92,300 ஆகும்.
- 7வது CPC இன் படி HC – Pay matrix level-4 பணியாளர்களுக்கு ரூ.25,500 முதல் 81,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
- கான்ஸ்டபிள் நிலை – 3 பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 21,700 முதல் அதிகபட்சம் 69,100 வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டது.
விண்ணப்பக் கட்டணம்:
- பொது, OBC மற்றும் EWS பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் 100 ரூபாய்.
- SC., ST, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்களுக்கு அனைத்து பிரிவினருக்கும் விண்ணப்பம் இலவசம்.
- விண்ணப்பக் கட்டணத்தை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலம் டெபாசிட் செய்யலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
- இந்த குரூப் C பதவிகளுக்கு விண்ணப்பிக்க, தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் எல்லைப் பாதுகாப்புப் படையின் (BSF) அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு இணையதளமான bsf.gov.in ஐப் பார்வையிட வேண்டும். ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிப்பதற்கான இணைப்பைப் பெறுவீர்கள். அனைத்து விண்ணப்பதாரர்களும் முதலில் அறிவிப்பைப் பதிவிறக்கம் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றி விண்ணப்ப செயல்முறையை முடிக்கலாம். விண்ணப்பிக்கும் போது கவனமாக இருங்கள். விண்ணப்பத்தில் பிழை இருந்தால், அது நிராகரிக்கப்படும்.
மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post