சமயபுரம் மாரியம்மனை தரிசித்த அனைவரும் உயர்ந்த நிலையை அடைந்துள்ளனர் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். அப்போது கொடி மரத்திலிருந்து மூலஸ்தானம் வரை பயபக்தியுடன் அம்மனை வணங்கிச் சென்றார். கோயில் குருக்கள்கள் அவருக்கு பூரண மரியாதை செலுத்தி அர்ச்சனை செய்தனர். பின்னர் கோயில் உள்பிரகாரத்தில் குடும்பத்துடன் சுற்றி வந்து தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளிடம் பேசிய அவர்... சமயபுரம் மாரியம்மனை தரிசித்தது மனதிற்கு மிகவும் திருப்தியாக உள்ளது. சமயபுரம் மாரியம்மன் தரிசித்தவர்கள் அனைவரும் உயர்ந்த நிலையை அடைந்துள்ளனர். அம்மன் அருளால் எனக்கு பேரும் புகழும் நிறைய கிடைத்தது.
சமயபுரம் மாரியம்மனை தரிசித்த அனைவரும் உயர்ந்த நிலையை அடைந்துள்ளனர் .மேலும் நேற்று விளையாடிய ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில் தோல்வியை தழுவியது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/143434/It-was-disappointing-that-India-lost-the-2nd-match-against-England--Srikanth.html
0 Comments:
கருத்துரையிடுக
Thanks for Read the post