Translate

இந்த வலைப்பதிவில் தேடு

துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்ட ஆயுதப்படை காவலர்.. ஆன்லைன் ரம்மி கடன் காரணமா?

கோவையில் ஆயுதப்படை காவலர் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்ட நிலையில், முதற்கட்ட விசாரணையில் ஆன்லைன் ரம்மி கடன் தொல்லை காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

கோவையில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கி வெடித்து, வயிற்றுப் பகுதியில் படுகாயமடைந்த நிலையில் அது தற்கொலை முயற்சி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னணியில் ஆன்லைன் ரம்மி காரணமாக அவர் கடனாளி ஆனதனால், விரக்தியில் தற்கொலை முயற்சி செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

இன்று மதியம் சுமார் 3 மணி அளவில் கோவையில் பொருட்காட்சியில் பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் காளிமுத்து தனது துப்பாக்கியால் வயிற்றில் சுட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டார். வயிற்றுப் பகுதியில் கடும் காயம் அடைந்த அவர், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் தீர்வு இல்லை. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனைப் பெற, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 - 24640050 என்ற எண்களில் தொடர்புக் கொண்டு இலவசமாக ஆலோசனைப் பெறலாம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/143430/armed-guard-attempted-suicide-by-shooting-himself-in-Coimbatore.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post