6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியர் வேலைக்கு சென்றபோது தங்களது 6 வயது மகளை அவரது பாட்டியின் வீட்டில் விட்டுச் சென்றுள்ளனர். அப்போது மதுரை மாவட்டம் உச்சப்பரம்புமேடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (40) என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு போக்சோ வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சுரேஷ்க்கு பாலியல் வன்கொடுமைக்கான ஒரு ஆயுள் தண்டனையும், பட்டியலின சிறுமியை வன்கொடுமை செய்ததற்கு ஒரு ஆயுள் தண்டனை என இரட்டை ஆயுள் தண்டனையும், 10ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/144064/Madurai-Double-life-sentence-for-convict-in-POCSO-case.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post