நண்பர்களுடன் ஏரியில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை ஆவடி பகுதியைச் சேர்ந்த நண்பர்களான சஜீவன் (17), அருள் (17) மற்றும் வெங்கடேசன் (17) ஆகியோர் வெள்ளவேடு அடுத்த கோலப்பஞ்சேரி சுங்கச்சாவடி அருகே உள்ள ஏரியில் குளிக்க சென்றதாக தெரிகிறது.
அப்போது சஜீவன் மற்றும் அருள் ஆகிய 2 பேரும் நீரில் மூழ்கியதை கண்ட அவர்களது நண்பன் வெங்கடேசன், வெள்ளவேடு காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், 2 மணி நேரமாக தேடி, இருவரையும் சடலங்களாக மீட்டனர். இதனையடுத்து இருவரது சடலங்களை கைப்பற்றிய வெள்ளவேடு காவல் துறையினர், உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நண்பர்களுடன் ஏரியில் குளித்தபோது சக நண்பர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/144069/Thiruvallur-The-unfortunate-incident-happened-to-two-boys-who-were-bathing-in-the-lake-with-their-friends.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for Read the post