Translate

இந்த வலைப்பதிவில் தேடு

போதையில் ஆட்டோ ஓட்டி கால்வாயில் கவிழ்த்த டிரைவர்.. கோவையில் மூவருக்கு படுகாயம்!

கோவை துடியலூரில் மதுபோதையில் அதிவேகத்தில் வந்த ஆட்டோ மோதியதில், நடந்து சென்ற பள்ளி மாணவி உட்பட 3 பேர் கால்வாயில் விழுந்து படுகாயமடைந்தனர்.

கோவை துடியலூர் காவல் நிலையம் அருகே மது போதையில் அதிவேகமாக ஆட்டோ ஓட்டி வந்த ஓட்டுநர், பள்ளி மாணவி உட்பட 3 பேர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி அருகில் இருந்த கால்வாயில் கவிழ்ந்திருக்கிறார். இந்த விபத்தில் நடந்து சென்ற மாணவி உட்பட 3 பேர் கால்வாயில் தூக்கி வீசப்பட்டிருக்கிறார்கள். ஆட்டோ ஓட்டுநரும் அதே கால்வாயில் விழுந்தார்.

image

இதைப் பார்த்த பொதுமக்கள் கால்வாய்க்குள் இறங்கி 4 பேரையும் மீட்டு தண்ணீர் கொடுத்து உதவினர். அருகில் காவல் நிலையத்தில் இருந்த போலீசார் அங்கு விரைந்து வந்து அதில் படுகாயமடைந்த மூவரையும் உடனடியாக 108 ஆம்புலன்ஸில் ஏற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநரை காவல் நிலையம் அழைத்து வந்து குளிக்க வைத்து வேறு சட்டை கொடுத்து மாற்ற வைத்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆட்டோவை ஓட்டி வந்தவர் தொப்பம்பட்டியை சேர்ந்த மோகன்ராஜ் என்பதும் இவர் சொந்தமாக பழைய ஆட்டோ ஒன்றை விலைக்கு வாங்கி நாளையில் இருந்து தொழில் தொடங்குவதற்காக ஓட்டி வந்துள்ளார்.

image

ஆட்டோவை வாங்கி வரும்போது மது அருந்திவிட்டு போதையில் அதிக வேகமாக ஆட்டோவை ஓட்டிவந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் குடித்துள்ளாரா என்பதை கண்டறிய மது குடித்ததை கண்டறியும் கருவி மூலம் சோதனை செய்தனர். ஆனால் போலீசாருக்கு டஃப் கொடுக்கும் வகையில் அந்தக் கருவியை வாயில் வைக்கும்போது ஊதுவது போல் நடித்து ஊதாமல் தவிர்த்திருக்கிறார்.

பல முறை முயற்சி செய்த போலீசார் ஒரு வழியாக எடுத்து முடித்தனர். இந்த சம்பவம் குறித்து மோகன் ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/143313/drunken-auto-driver-hits-on-3-at-thudiyalur-in-coimbatore.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post