பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் வாழ வழியின்றி மூன்று குழந்தைகள் உட்பட 8 பேர் தனுஷ்கோடியில் தஞ்சமடைந்தனர்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடுகளான ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு நாளுக்கு நாள் இடம்பெயர்ந்து வருவது அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் ஏற்கெனவே இலங்கையில் இருந்து 142 நபர்கள் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், அவர்கள் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் உட்பட எட்டு பேர் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கம்பிபாடு பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளதாக கடலோர காவல் குழுமம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அவர்களை மீட்டு விசாரணைக்காக மண்டபம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று பின்னர் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/145757/8-More-Sri-Lankans-arrived-in-Tamil-Nadu.html
0 Comments:
கருத்துரையிடுக
Thanks for Read the post