Translate

இந்த வலைப்பதிவில் தேடு

கல்பாக்கம்: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து – பெண் உட்பட இருவர் உயிரிழப்பு

கார் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு மீண்டும் சென்னை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வாயலூர் கிழக்கு கடற்கரை சாலையில் வரும்போது புதுச்சேரி நோக்கி மீன்கள் ஏற்றிச் சென்ற ஒரு கண்டெய்னர் லாரி, காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

image

இதில், காரில் பயணம் செய்த ஒரு பெண் உட்பட இருவர் உயிரிழந்தனர். பின் இருக்கையில் அமர்ந்து இருந்த மூன்று பெண்கள் படுகாயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த சதுரங்கப்பட்டினம் போலீசார், பிரேதங்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/145756/Car--Container-lorry-accident--Two-dead.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post