Translate

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழக அரசின் இலவச வீட்டில் வேலம்மாள் பாட்டி; பயனர் தரவேண்டிய தொகையை ஏற்றது திமுக!

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வேலம்மாள் பாட்டிக்கு தமிழக அரசு சார்பில் வீடு வழங்கப்பட்டது.

கொரோனா கால கட்டத்தில் நிவாரணமாக வழங்கப்பட்ட இரண்டாயிரம் ரூபாய் மற்றும் மளிகை பொருட்களுடன் வேலம்மாள் பாட்டி மகிழ்ச்சியில் சிரிக்கும் புகைப்படம் வைரலானது.

தொடர்புடைய செய்தி: இணையத்தை ஆக்கிரமித்த ஏழை பாட்டி: நெகிழ்ச்சி அனுபவத்தை பகிரும் போட்டோகிராபர் ஜாக்சன்

அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த தமிழக முதல்வர், ஏழையின் சிரிப்பு நமது அரசின் சிறப்பு என பதிவிட்டிருந்தார். இதன் பின்னர் கன்னியாகுமரிக்கு சென்ற முதல்வர், வேலம்மாள் பாட்டியை நேரில் சந்தித்திருந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலம்மாள் பாட்டி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை ஒன்றினை விடுத்து இருந்தார்.

image

அதில் தனக்கு வசிக்க வீடு இல்லை எனவும் தமிழக அரசு சார்பில் தனக்கு வீடு வழங்க வேண்டுமெனவும் கேட்டிருந்தார். இதையடுத்து, இரவோடு இரவாக தமிழக அரசு சார்பில் மூதாட்டி வேலம்மாளுக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது.

image

அந்த வீட்டை பெறுவதற்கு 75 ஆயிரம் ரூபாய் அரசுக்கு கட்ட வேண்டிய சூழல் இருந்ததால், அதனை திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பூதலிங்கம் பிள்ளை மாவட்ட ஆட்சியர் அரவிந்திடம் செலுத்தினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/145833/Tamilnadu-government-provided-a-house-to-a-Kanyakumari-senior-citizen-Velammal-who-sought-help-from-the-Chief-Minister.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post