Translate

இந்த வலைப்பதிவில் தேடு

`அதிமுக பொதுக்குழு செல்லாது’ தீர்ப்பை எதிர்த்த இபிஎஸ் மனு மீது இன்று உயர்நீதிமன்ற விசாரணை!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த கூடுதல் மனு கொடுத்துள்ளார். இந்த மனுவை இன்று விசாரணைக்கு பட்டியலிட உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அதிமுக பொதுக்குழு தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது.

`அதிமுக தலைமை விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் - ஜூலையில் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது’ உள்ளிட்ட தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல்முறையீடு மனுவை பட்டியலிடும்படி, கூடுதல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

தொடர்புடைய செய்தி: `இபிஎஸ்-ஐ பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது; சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

image

எடப்பாடி பழனிசாமியின் அந்த கூடுதல் மனுவும், ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த கேவியட் மனுவும் நீதிபதிகள் எம். துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது அம்மன் வைரமுத்து வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளையும் எதிர்த்து மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, மூன்று மனுக்களையும் இன்று விசாரணைக்கு பட்டியலிடும்படி பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/145831/The-High-Court-hearing-today-on-the-EPS-petition-on-court-decision-about-AIADMK-General-body-meeting.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post