பின்லாந்து பிரதமர் சன்னா மரினுக்கு நடத்திய பரிசோதனையில் அவர் போதை பொருள் உட்கொள்ளவில்லை என தெரிய வந்துள்ளது.
கேளிக்கை நிகழ்ச்சியில் பின்லாந்து பிரதமர் சன்னா மரின் கலந்து கொண்டது தொடர்பான வீடியோ விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்களுடன் கேளிக்கை நிகழ்ச்சிகளில் சன்னா மரின் கலந்து கொண்டு மது அருந்துவது போன்ற வீடியோக்கள் வெளியாகின. இந்த நிகழ்ச்சியில் போதை பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், சன்னா மரீனை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.
இந்நிலையில் தான் மது அருந்தியதாகவும், ஆனால் சட்ட விரோதமான போதை பொருட்களை பயன்படுத்தவில்லை என சன்னா மரின் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் போதை பொருள் பயன்படுத்தவில்லை என தெரிய வந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/145830/Finland-PM-Sanna-Marin-drugs-test-negative-after-party-video.html
0 Comments:
கருத்துரையிடுக
Thanks for Read the post